Tuesday 29 November 2011

முல்லைப் பெரியாறு …தினமணி கட்டுரை..

 
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.
 முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
 அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.
 இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.
 புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
 முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
 நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
 கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
 படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.
 இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
 முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
 அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.
 மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?
 

Tuesday 22 November 2011

இதுதான்...காதல் என்பதா?




உன்னையும்என்னையும்
இணைத்து நண்பர்கள்
கிசுகிசுத்த அந்த நிமிடங்கள்...

'மறுப்பைச் சொல்'
என்ற போது..
மறுக்காமல்..
மறுப்பைச் சொன்னபோதும்...

இனிப்பாய்த் தானிருந்தது..
ஆமாம்...

ஏனெனில்...
இப்படித்தானே எல்லா
காதலும் ஆரம்பமகின்றன...!

வாழ்க வளமுடன்..!

Sunday 20 November 2011

கூடங்குளம்...கூடும்குளமா? கூடாகுளமா?

கூடங்குளம்...இந்தியா முழுக்கப் பிரபல்யமாகிவிட்டது...ஆனால், தீர்வுதான்..இன்னமும் இழுபறியில் போய்க்கொண்டிருக்கின்றது..

இந்த அணுமின் நிலையத்திற்கு..எதிர்ப்பலைகள் முன்னரே இருந்தாலும்...தற்சமயம் ஆதரவு அலைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன..

வைகோ...இராமதாஸ் தவிர பிரதான எதிர்க்கட்சிகள் தள்ளிநின்றே வேடிக்கைப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது.  பத்திரிக்கைகள் கூட முழுமனதோடு எதிர்ப்புகளைப் பதிவு செய்யவில்லை.

சராசரி மனிதர்களிடையே..'இவ்வளவு வருசம் தூங்கிவிட்டு..இப்போ முழிச்சு சண்டை போடுகிறார்களே என்ற எண்ணம்தான் மிகைப்பட்டு இருக்கின்றது.

கலாம் முதலானோர் விலாவாரியாக விளக்கம் சொல்லியும், போராட்டக்குழுவின் எண்ணம் மாறுவதாகத் தெரியவில்லை..

புதியதாய்க் கேள்விகளைக் கேட்டு, 'மேப்பு'ம் கேட்பது எதற்கு என்பது புதிராய் இருக்கின்றது!!!!

இதற்கிடையில், வைகோ 'இலங்கைக்கு கரண்ட்..அதற்கே கூடங்குளம்' என்று வேறு, ஷாக் கொடுக்கிறார்...

அங்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டியன செய்து, பயம் போக்கி நம்பிக்கையூட்ட தெளிவான முயற்சிகள் என்ன என்பது குறித்து போராட்டக்குழுவும், அரசும் வெளிப்படையான எண்ணத்தோடு அணுகினால் ஒழிய,  இப்போதைக்கு இது தீர்வாகாது..  ! அதுவரை, அரசியல் பண்ணுபவர்களுக்கும், ஆதாயம் தேடுவோர்க்குமே பலனாய் இருக்கும்...!

http://tamil.oneindia.in/news/2011/11/20/koodankulam-centre-team-ll-decide-next-collector-aid0175.html

Friday 11 November 2011

போதிதர்மன் - எப்படி ?

தீபாவளி எதிர்பார்ப்பு...சூர்யா... தமிழ்த்திரையின் புதியதொரு நம்பிக்கை நட்சத்திரம்... 7 - ஆம் அறிவு...கஜினி வென்ற முருகதாஸ்..தமிழின உணர்வுடன் பெருமைப்படுத்த எடுக்கப்பட்ட திரைப்படம்..என்ற அடைமொழி....

இன்னும் பல.....எவ்வளவு எதிர்பார்ப்புகள்...ஒருபுறம் வியாபாரதத்திற்கான யுக்தி என்றபோதும்...எல்லா எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர பூர்த்தி செய்வது என்பது கடினம்தான்...

தீபாவளி முடியுமுன்னரே...படத்தின் ரிசல்ட் குறித்த கருத்துக்கள் 'mixed' - ஆக இருந்தபோதும்.. சுமார்...பார்க்கலாம்...பார்க்கவேண்டும்.. என்ற விளம்பரங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளைக் குறைத்து விட்டதாலேயோ என்னவோ....எனக்குப் படம் பிடிக்கவே செய்தது..

காதல்..குடும்பம்..காமெடி..ஆட்டம்..பாட்டம்..போன்ற சென்டிமெண்ட்களை மையப்படுத்தாமல், ஆரம்பமே..மையக்கருத்தை நோக்கி...




முருகதாஸும்/சூர்யாவும் ஏற்கனவே இணைந்து ஜெயித்த அனுபவம் ...இன்னொரு மசாலாவை நம்பாமல்..புதியமுயற்சி எடுத்து இருவருமே இன்னொரு 'குட்' போடவைத்திருக்கிறார்கள்.

உலகெங்கும் தோற்றுக்கொண்டிருக்கின்ற தமிழனுக்கு...ஆறுதலான படம்தான்..

போதிதர்மனுக்கான மெனக்கெடலும்..தமிழன் குறித்த வசனக்காட்சிகளிலும்..இறுதிக்காட்சிகள்..சண்டைகளிலும்..புதிய சூர்யா தெரிகிறார்..

ஷ்ருதி, சூர்யாவைவிட இளமையாய்த் தெரிவதாலும்..ஆராய்ச்சி மாணவியாய் வருவதால்..காதலைவிட வரலாறு அதிகம் பேசுவதாலும்...'காதலுக்கான'  எஃபெக்ட் கம்மியோ கம்மி.. but, cute!

'எம்மா..எம்மா..'பாடல் நிச்சயமாய் தேவையில்லாத ஒன்று..

'விவேகமாய் இரு'-ன்னு ஷ்ருதி சொல்லுகின்ற போதும்...'எப்பதான் திருப்பி அடிக்கிறது ?'ன்னு கேட்கிறப்ப.. மனசுக்கு வலிக்கிறது..இலங்கை நிகழ்வுகளுக்கு.. (தமிழன்/தமிழ் குறித்து இன்னொரு தனிப்பதிவு போடவேண்டும்) - உலகொலிக்கச் செய்த முருகதாஸுக்கும்/சூர்யாவுக்கும் நன்றிகள் பல..

டிஎன்ஏ - விசயங்களும், நிகழ்கால சூர்யாவிடம் போதிதர்ம மரபு பாரம்பரியங்களை தூண்டுகின்ற நிகழ்வுகளும் எதிர்பார்த்த மாதிரியே நகர்ந்தாலும்.. கண்டிப்பாய் வித்தியாசமான பாரட்டுக்குரிய முயற்சிக்குரிய படம்தான்..


சீன நண்பர்களிடம் 'பெருமையாய்ச் சொல்லிக்கொள்ள' நமக்கும் ஒரு விசயம்...

திரையில் பாருங்கள்....

.

Wednesday 9 November 2011

இந்தியா எங்கே இருக்கிறது - நாணயம் விகடனில் படித்தது


இந்த வார நாணயம் விகடனில் படித்தது....சிந்திக்க வைத்தது..உங்கள் பார்வைக்கும்...



இந்தியா எங்கே இருக்கிறது!
ந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய கார்ப்பரேட் மோசடியான சத்யம் நிறுவன மோசடியில் சிறையிலடைக்கப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்கராஜு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாயல்ல, 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுமார் இரண்டே முக்கால் வருடங்கள் சிறைக் கம்பிக்குப் பின்னால் இருந்தவர், இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
முதலீட்டாளர்களுக்கு ராஜு செய்த துரோகத்தை எந்த காவல்துறை அமைப்பும் கண்டுபிடிக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால் செபிக்கு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு ராஜுவே கடிதம் எழுதிக் கொடுத்த பிறகுதான் நாட்டின் மிகப் பெரிய மோசடி சத்தமில்லாமல் சத்யத்தில் நடந்திருப்பது உலகுக்கு தெரியவந்தது.






இப்படி குற்றவாளியே தனது தவறுகளை ஒப்புக்கொண்டு கைதான பிறகும், அவரது மோசடிகளை நிரூபித்து அவருக்கான உரிய தண்டனையை இன்னும் வாங்கித் தர முடியாமல் போனதோடு, ஜாமீனில் வெளியே வரவும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது சி.பி.ஐ. உள்ளே போன ராஜுவும், தான் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து பல்டியடித்து வெளியே வந்துவிட்டார்.

இன்சைடர் டிரேடிங் விவகாரத்தில் சிக்கிய ராஜரத்னம், ரஜத் குப்தா ஆகியோர் வழக்கில் விரைவாக நடவடிக்கைகள் எடுத்த அமெரிக்கா எங்கே இருக்கிறது, தானே ஒப்புக்கொண்டு கைதானவருக்குகூட இன்னும் உரிய தண்டனையை வாங்கித் தரமுடியாத இந்தியா எங்கே இருக்கிறது!

புதிய தலைமுறை

http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp?Section_id=6&News_id=44086&Tag=36580


சமீபத்தில் ஆரம்பிக்கப் பட்ட 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி, செய்திப்பிரிவுக்கான வரிசையில், முதலிடத்தைப் பிடித்திருப்பதாய் இன்றைய செய்தித்தாள் கூறுகிறது...

உண்மைதான்...

இரண்டு கழகங்களின் சானலும்..நடுநிலை ஒலி/ஒளி பரப்பு செய்வதில்லை என்பது தெரிந்த விசயம்தான்..

அரசின் பொதிகைத் தொலைக்காட்சி, தொழில்நுட்பத்தில் இன்னும் மேம்பட வேண்டியிருப்பதால், அவ்வப்போதுதான் பார்க்கத் தோன்றும்...

புதிய தலைமுறை தொலைக்காட்சி...பல்வேறு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து.. (தேன் எப்படி எடுக்கப்படுகிறது.. வாசகர் வோட்டு..., பிரச்னைகள் குறித்து மக்களிடையே நேரிடைப் பேட்டி...) முதலிடத்தைப் பிடித்திருப்பது... மகிழ்சிக்குரிய ஒன்று...

Congrats Puthiyathalaimurai

இனியெல்லாம்..சுகமே

ரொம்ப நாளா இணையத்தில் ப்லாக் படித்துக் கொண்டு வருகிறேன்..மனதில் பட்டதை எழுதுவதற்கு நாமும் ஒன்னு தொடங்கலாமேன்னு தொடங்கிவிட்டேன்.

வாழ்வின் நிகழ்வுகளில்..படித்தவை..பாதித்தவை..எனத் தொடர்ந்து எழுதலாம் என்ற அவாவில்..தொடங்குகிறேன்..

இனியெல்லாம்..சுகமே பாடல் கேட்டிருக்கீறீர்களா?

உறவுகள் தொடர்கதை..
உணர்வுகள் சிறுகதை...

- உண்மைதான்...ஆனால், இன்று உறவுகளே சிறுகதையாய்.. காலச்சக்கரம் மாற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது...

அவசரயுகத்தில்..தன்னைப் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லாத போது....உறவுகளையும் சுற்றத்தையும்..நினைக்கிறார்களா..என்ன?

சரி நிறைய பேசலாம்...போகப்போக..

இனியெல்லாம் சுகமாய் இருக்க.. நட்புடன்... இனியன்...