Friday 11 November 2011

போதிதர்மன் - எப்படி ?

தீபாவளி எதிர்பார்ப்பு...சூர்யா... தமிழ்த்திரையின் புதியதொரு நம்பிக்கை நட்சத்திரம்... 7 - ஆம் அறிவு...கஜினி வென்ற முருகதாஸ்..தமிழின உணர்வுடன் பெருமைப்படுத்த எடுக்கப்பட்ட திரைப்படம்..என்ற அடைமொழி....

இன்னும் பல.....எவ்வளவு எதிர்பார்ப்புகள்...ஒருபுறம் வியாபாரதத்திற்கான யுக்தி என்றபோதும்...எல்லா எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர பூர்த்தி செய்வது என்பது கடினம்தான்...

தீபாவளி முடியுமுன்னரே...படத்தின் ரிசல்ட் குறித்த கருத்துக்கள் 'mixed' - ஆக இருந்தபோதும்.. சுமார்...பார்க்கலாம்...பார்க்கவேண்டும்.. என்ற விளம்பரங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளைக் குறைத்து விட்டதாலேயோ என்னவோ....எனக்குப் படம் பிடிக்கவே செய்தது..

காதல்..குடும்பம்..காமெடி..ஆட்டம்..பாட்டம்..போன்ற சென்டிமெண்ட்களை மையப்படுத்தாமல், ஆரம்பமே..மையக்கருத்தை நோக்கி...




முருகதாஸும்/சூர்யாவும் ஏற்கனவே இணைந்து ஜெயித்த அனுபவம் ...இன்னொரு மசாலாவை நம்பாமல்..புதியமுயற்சி எடுத்து இருவருமே இன்னொரு 'குட்' போடவைத்திருக்கிறார்கள்.

உலகெங்கும் தோற்றுக்கொண்டிருக்கின்ற தமிழனுக்கு...ஆறுதலான படம்தான்..

போதிதர்மனுக்கான மெனக்கெடலும்..தமிழன் குறித்த வசனக்காட்சிகளிலும்..இறுதிக்காட்சிகள்..சண்டைகளிலும்..புதிய சூர்யா தெரிகிறார்..

ஷ்ருதி, சூர்யாவைவிட இளமையாய்த் தெரிவதாலும்..ஆராய்ச்சி மாணவியாய் வருவதால்..காதலைவிட வரலாறு அதிகம் பேசுவதாலும்...'காதலுக்கான'  எஃபெக்ட் கம்மியோ கம்மி.. but, cute!

'எம்மா..எம்மா..'பாடல் நிச்சயமாய் தேவையில்லாத ஒன்று..

'விவேகமாய் இரு'-ன்னு ஷ்ருதி சொல்லுகின்ற போதும்...'எப்பதான் திருப்பி அடிக்கிறது ?'ன்னு கேட்கிறப்ப.. மனசுக்கு வலிக்கிறது..இலங்கை நிகழ்வுகளுக்கு.. (தமிழன்/தமிழ் குறித்து இன்னொரு தனிப்பதிவு போடவேண்டும்) - உலகொலிக்கச் செய்த முருகதாஸுக்கும்/சூர்யாவுக்கும் நன்றிகள் பல..

டிஎன்ஏ - விசயங்களும், நிகழ்கால சூர்யாவிடம் போதிதர்ம மரபு பாரம்பரியங்களை தூண்டுகின்ற நிகழ்வுகளும் எதிர்பார்த்த மாதிரியே நகர்ந்தாலும்.. கண்டிப்பாய் வித்தியாசமான பாரட்டுக்குரிய முயற்சிக்குரிய படம்தான்..


சீன நண்பர்களிடம் 'பெருமையாய்ச் சொல்லிக்கொள்ள' நமக்கும் ஒரு விசயம்...

திரையில் பாருங்கள்....

.

4 comments:

arul said...

nalla vimarsanam

இனியன் said...

நன்றி. அருள்..

அருளின் பின்னூட்டமே முதல் பின்னூட்டம், சுவடிற்கு..அருளின் அருளுக்கு நன்றி..

PUTHIYATHENRAL said...

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

மானம்கெட்ட கடல்படையும் அதன் கமாண்டரும்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_13.html

PUTHIYATHENRAL said...

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
இந்தியா உடையும்! ஆனா உடையாது! http://www.sinthikkavum.net/2011/11/blog-post.html

Post a Comment

எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...