Wednesday 9 November 2011

இந்தியா எங்கே இருக்கிறது - நாணயம் விகடனில் படித்தது


இந்த வார நாணயம் விகடனில் படித்தது....சிந்திக்க வைத்தது..உங்கள் பார்வைக்கும்...



இந்தியா எங்கே இருக்கிறது!
ந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய கார்ப்பரேட் மோசடியான சத்யம் நிறுவன மோசடியில் சிறையிலடைக்கப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்கராஜு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாயல்ல, 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுமார் இரண்டே முக்கால் வருடங்கள் சிறைக் கம்பிக்குப் பின்னால் இருந்தவர், இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
முதலீட்டாளர்களுக்கு ராஜு செய்த துரோகத்தை எந்த காவல்துறை அமைப்பும் கண்டுபிடிக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால் செபிக்கு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு ராஜுவே கடிதம் எழுதிக் கொடுத்த பிறகுதான் நாட்டின் மிகப் பெரிய மோசடி சத்தமில்லாமல் சத்யத்தில் நடந்திருப்பது உலகுக்கு தெரியவந்தது.






இப்படி குற்றவாளியே தனது தவறுகளை ஒப்புக்கொண்டு கைதான பிறகும், அவரது மோசடிகளை நிரூபித்து அவருக்கான உரிய தண்டனையை இன்னும் வாங்கித் தர முடியாமல் போனதோடு, ஜாமீனில் வெளியே வரவும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது சி.பி.ஐ. உள்ளே போன ராஜுவும், தான் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து பல்டியடித்து வெளியே வந்துவிட்டார்.

இன்சைடர் டிரேடிங் விவகாரத்தில் சிக்கிய ராஜரத்னம், ரஜத் குப்தா ஆகியோர் வழக்கில் விரைவாக நடவடிக்கைகள் எடுத்த அமெரிக்கா எங்கே இருக்கிறது, தானே ஒப்புக்கொண்டு கைதானவருக்குகூட இன்னும் உரிய தண்டனையை வாங்கித் தரமுடியாத இந்தியா எங்கே இருக்கிறது!

No comments:

Post a Comment

எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...